Header Ads

  • சற்று முன்



    என் ஆளோட செருப்பைக் காணோம்: நல்லா வைக்கிறாய்ங்கய்யா டைட்டிலை!

    சமீபகாலமாக தமிழ் சினிமாவுக்கு வைக்கப்படும் டைட்டில்களைக் கண்டு ரசிகர்கள் சிலர் கடுப்பாகி வருகின்றனர்.

    ஒரு சினிமா படத்துக்கு, டைட்டிலே பிரதானம். படத்தின் டைட்டிலே, கதையை சொல்லும் விதமாக ஒரு காலத்தில் வைக்கப்பட்டது. பாசமலர், பட்டிக்காடா பட்டணமா? என்பது போல. இதை வைத்தே ரசிகர்களும் சினிமாவுக்கு சென்று வந்தனர். அடுத்து கேரக்டர்களின் பெயர்களை டைட்டிலாக வைத்தனர். இது ஒரு பேஷனாகவே ஆனது. இன்றுவரை அப்படி டைட்டில் வைக்கும் பழக்கம் இருக்கிறது. இதற்கிடையில் பழைய பாடல்களின் வார்த்தைகளை டைட்டிலாக வைக்கும் ஸ்டைல் வந்தது. ‘ பார்வை ஒன்றே போதுமே’, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ , ’நீதானே என் பொன் வசந்தம்’ , ’மயக்கம் என்ன’ , ’அச்சம் என்பது மடமையடா’ என அந்த பழக்கம் நீண்டது. அடுத்து தூய தமிழில் டைட்டில் வைக்கும் வழக்கம் வந்தது. அதாவது, வாரணம் ஆயிரம், அனேகன், அயன், கவண் என சென்றுகொண்டிருக்கிறது அந்த வகை டைட்டில்.

    அடுத்து எண்களைக் கொண்டு டைட்டில் வைக்கும் வழக்கம் வந்தது. அதாவது அந்த 7 நாட்கள், 420, 180, குற்றம் 23, 8 தோட்டாக்கள் எனத் தொடர்ந்தது அந்த வரிசை. அடுத்து பறவை, விலங்குகளின் பெயர்களில் டைட்டில் வைக்கும் டிரெண்ட் சினிமாவில் வந்தது. அதாவது கழுகு, குருவி, மைனா, சிங்கம், சிறுத்தை, புலி எனத் தொடர்ந்தது இந்த ஸ்டைல்.

    இந்த வகையறாக்களைப் பின்னுக்குத் தள்ளி இப்போது எதை வேண்டுமானாலும் டைட்டில் ஆக்கலாம் என்ற நிலைக்கு இயக்குனர்கள் வந்துவிட்டனர். சில டைட்டில்களைப் பார்த்தால் சிரிப்பும் சில டைட்டிகளால் கடுப்பும் ஏற்படுவதாக ரசிகர்கள் சிலர் கூறுகின்றனர். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் அவர்கள் தங்கள் கருத்தை வெளியிட்டு வருகின்றனர்.

    சமீபகாலமாக வைக்கப்படும் தலைப்புகள், ’ஏன்டா தலைக்கு எண்ணெய் தேய்க்கலை’, ’என் ஆளோட செருப்பைக் காணோம்’, ’பீச்சாங்கை’, திட்டம் போட்டுத் திருடுற கூட்டம்’, ’பிச்சுவா கத்தி’, ’தப்புத்தண்டா’ என்று நீள்கிறது.

    இதுபற்றி இயக்குனர் ஒருவரிடம் கேட்டபோது, ‘இன்றைக்கு தியேட்டருக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அவர்களை தியேட்டருக்கு இழுக்க புதுமையான, சுவாரஸ்யமான டைட்டில்கள் தேவைப்படுகிறது. அதனால்தான் இப்படி வைக்கப்படுகிறது. இதில் தவறேதும் இல்லை’ என்று தெரிவித்தார்.

    என்னமோ போங்க!

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad