Header Ads

  • BREAKING



    பிரபல சின்னத்திரை நடிகை மைனா நந்தினியின் கணவர் தற்கொலை.

    சென்னை விருகம்பாக்கத்தில் பிரபல தொலைக்காட்சி நடிகை நந்தினியின் கணவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். நடிகை நந்தினி சரவணன் மீனாட்சி, வம்சம் உள்ளிட்ட தொலைகாட்சித் தொடர்களிலும் மற்றும் திரைப்படங்களில் சிறு வேடங்களிலும் நடித்தவர். இவரது கணவர் கார்த்திகேயன் தியாகாராயரில் உடற்பயிற்சிக்கூடம் நடத்திவந்தார். இவர்களது வீடு வளசரவாக்கத்தி உள்ள நிலையில் கார்த்திகேயன் நேற்று மாலை விருகம்பாக்கம் பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கியதாகக் கூறப்படுகிறது. வீட்டில் இருந்து அவரது செல்ஃபோனை தொடர்புகொள்ள முடியாமல் இருந்த நிலையில் இன்றுகாலை கார்த்திகேயன் அறையில் இருந்து வெகுநெரம் வெளியே வராததால் ஊழியர்கள் அறைக் கதவை திறந்து உள்ளே நுழைந்தனர். அப்போது கார்த்திகேயன் வாயில் நுரை தள்ளிய நிலையில் படுக்கையில் சடலமாகக் கிடந்தார். சோதனையில் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடித்தது தெரியவந்தது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad