சென்னையில் மீன் விலை பல மடங்கு உயர்வு.
சென்னை: மின்பிடி தடைகாலம் காரணமாக சென்னையில் மீன் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் கடல் உயிரினங்களின் இனப்பெருக்க காலமாக கண்டறியப்பட்டுள்ளது.
அந்த நாட்களில் மீன்கள் ஆழ்கடலில் முட்டையிட்டு, குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும். அதனால் அப்போது மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
சரியாக 45 நாட்கள் கடைபிடிக்கப்படும் மீன் பிடித் தடைக்காலத்தில் விசைப் படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் கரைகளிலேயே நிறுத்தப்படும்.
இந்நிலையில் மின்பிடி தடைகாலம் காரணமாக சென்னையில் மீன் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை