Header Ads

  • BREAKING



    சஹாரா நிறுவனத்தின் ஆம்பி வேலி நகரியத்தை ஏலம் விட உச்சநீதிமன்றம் உத்தரவு.


    சஹாரா நிறுவனத்திற்கு சொந்தமான ஆம்பி வேலி (Aamby valley) நகரியத்தை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    சஹாரா குழுமம் முதலீட்டாளர்களிடம் வாங்கிய 25 ஆயிரம் கோடி ரூபாயை திருப்பி தராததால், 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம், அதன் தலைவர் சுப்ரதா ராய், கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தாயாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் பரோலில் சென்ற அவர், தொடர்ந்து பரோலை நீட்டித்து வருகிறார். இதனால், 5 ஆயிரம் கோடி ரூபாயை மார்ச் மாத இறுதிக்குள் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் செலுத்துமாறு, ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சுப்ரதா ராய் இதுவரை பணத்தை செலுத்தாத நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மஹாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியில் உள்ள சஹாரா நிறுவனத்துக்கு சொந்தமான 39 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆம்பி வேலி நகரியத்தை ஏலம் மூலம் விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் சுப்ரதா ராய் நேரில் ஆஜராக உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், விசாரணையை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad