Header Ads

  • BREAKING



    தமிழக தேர்தல் ஆணையராக மாலிக் பெரோஸ்கான் பொறுப்பேற்பு.

    தமிழக தேர்தல் ஆணையராக மாலிக் பெரோஸ்கான் பொறுப்பேற்றுக்கொண்டார்.
    மாநிலத் தேர்தல் ஆணையராக இருந்த சீதாராமன் கடந்த மாதம் 22-ஆம் தேதி ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து புதிய தேர்தல் ஆணையராக மாலிக் ஃப்ரொஸ்கான் நியமிக்கப்படார். இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு வந்த மாலிக் பெரோஸ்கான் புதிய ஆணையாரக பொறுப்பேற்றுக்கொண்டார். உள்ளாட்சித் தேர்தலை அடுத்த மாதம் 14ந் தேதிக்குள் நடத்தி முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் புதிய ஆணையராக மாலிக் ஃபெரோஸ்கான் பொறுபேற்றுள்ளார். பதவி ஏற்றதை தொடர்ந்து அவர், உள்ளாட்சித் தேர்தல் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. மாலிக் ஃபேரோஸ்கான் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad