Header Ads

  • சற்று முன்



    வேளாங்கண்ணி மெட்ரிக்பள்ளிக்கு ஆதரவாக மாணவர்களின் பெற்றோரை ஓட ஓட விரட்டி அடித்த எம்.எல்.ஏ வெற்றிவேலின் ஆதரவாளர்கள்.


    கொடுங்கையூரை அடுத்த முத்தமிழ்நகரில் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 2013ஆம் ஆண்டு முதல் தங்கள் பள்ளி சி.பி.எஸ்.இ. பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறி மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகத்தினர் கூடுதலாக கல்விக் கட்டணம் வசூலித்ததாகக் கூறப்பட்டுகிறது.
    ஆனால் தற்போது வரை பள்ளி நிர்வாகம் கூறிய படி சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திற்கு அரசு அனுமதி கிடைக்கவில்லை. இதை மறைத்து ஒவ்வொறு ஆண்டும் மாணவர்களின் பெற்றோரை ஏமாற்றி கல்விக் கட்டண கொள்ளையில் ஈடுபட்டுள்ளது வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாகம். அண்மையில் எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு வழங்கிய பள்ளி மாற்றுச் சான்றிதழ் மூலம் இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
    தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவர்களின் பெற்றோர் வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளியை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோருடன் பேச்சுவார்த்த்தை நடத்த பள்ளியின் தாளாளர் சந்தனமுத்து அழைப்பின் பேரில் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. வெற்றிவேல் தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்தார். எம்.எல்.ஏவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் சிலர் முழக்கமிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த எம்.எல்.ஏ. வெற்றிவேலின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் சொல்லியுள்ளனர்.இதற்கு மறுப்பு தெரிவித்த பெற்றோர் சிலரை எம்.எ.ஏ. வெற்றிவேலின் ஆதரவாளர்கள் ஓட ஓட விரட்டித் தாக்கினர்.
    பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் முன்னிலையில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தால் பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தின் அராஜகப் போக்குக்கு எதிராக ஒன்று திரண்டு முழக்கமிட்டனர்.
    நிலைமை விபரீதமாவதை உணர்ந்த எம்.எல்.ஏ. வெற்றிவேல் பள்ளி நிர்வாகத்திடமிருந்து பெற்றோருக்கு நீதி கிடைக்க ஏற்பாடு செய்வதாகக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் பள்ளி வளாகம் போராட்டக் களம் போல் காட்சியளித்தது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad