இரு மடங்கு உயர்த்தப்பட்டது ரிசர்வ் வங்கி ஆளுநர்களின் அடிப்படை ஊதியம்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் மற்றும் துணை ஆளுநர்களின் மாத அடிப்படை ஊதியம் இரு மடங்குக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி ஆளுநரின் அடிப்படை ஊதியம் 90 ஆயிரம் ரூபாயிலிருந்து இரண்டரை லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. துணை ஆளுநர்களின் அடிப்படை ஊதியம் 80 ஆயிரம் ரூபாயிலிருந்து இரண்டே கால் லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஜனவரி 1-ம் தேதியிலிருந்து இந்த ஊதிய உயர்வு அமலுக்கு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை