Header Ads

  • BREAKING



    அமைச்சர்கள் உரை இந்தியில்தான் இருக்க வேண்டும்: பிரணாப் ஒப்புதல்.

    குடியரசுத் தலைவர் மற்றும் அமைச்சர்கள் ஆற்றும் உரைகள் அனைத்தும் ஹிந்தியிலேயே இருக்கவேண்டும் என அதிகாரப்பூர்வ மொழிகளுக்கான நாடாளுமன்றக்குழு அளித்துள்ள பரிந்துரையை பிரணாப் முகர்ஜி ஏற்றுக்கொண்டுள்ளார்.

    முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான குழு அளித்துள்ள பரிந்துரையில் அனைத்து பிரமுகர்களும் ஹிந்தியில் உரையாற்றவேண்டும். இதே போல்அனைத்து விமான நிறுவனங்களும் தங்களது பயணச் சீட்டை ஹிந்தியில் அச்சிடவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் குடியரசுத் தலைவர் ஏர்-இந்தியா விமான டிக்கெட்டுகளில் ஹிந்தியை கட்டாயமாக்குவதற்கு மட்டும் ஒப்புதல் அளித்துள்ளார். அதே நேரம் அரசு வேலைவாய்ப்பு பெறுவதற்கு ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும், பத்தாம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை குடியரசுத்தலைவர் நிராகரித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad