மாநில தேர்தல் ஆணையர் பதவி காலி: என்னாகும் உள்ளாட்சி தேர்தல்?
உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில் மாநில தேர்தல் ஆணையர் பதவி காலியாக உள்ளது என அறிவிப்பு வெளிவந்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை மே 14 ஆம் தேதிக்குள் நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையர் பொறுப்பில் இருந்த சீதாராமனின் 2 ஆண்டு பதவிக்காலம், மார்ச் 22 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. புதிய ஆணையர் நியமிக்கப்படவில்லை. உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில் மாநில தேர்தல் ஆணையர் பதவி காலியாக உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை