Header Ads

  • BREAKING



    குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு.


    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி 7 வது வார்டு குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடையை அமைக்கும் முடிவை கண்டித்து கிராம மக்கள் கருப்புக் கொடியுடன் நேற்றிரவு உத்தமபாளையம் – சுருளி சாலை மறியலில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே ஜங்களாபுரம் கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடையை கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கடந்த 15 நாளாக இரவு பகலாக போராடி வருகின்றனர். நேற்றிரவும் அவர்கள் சாலையில் படுத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதேபோன்று திருச்செங்கோடை அடுத்த கிளாக்காடு கிராமத்தில் மூடுவதாக அறிவித்த டாஸ்மாக் கடையை மீண்டும் திறந்ததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். கடை ஊழியர்களே மது பாட்டில்களை உடைத்துவிட்டு போராட்டக்காரர்கள் உடைத்ததாக கூறுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். பெரம்பலூர் மாவட்டம் செஞ்சேரி கிராமம் அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராம மக்கள் முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். கடையை போராட்டக்காரர்கள் சூறையாட முயன்றதால், அதிகாரிகளே கடையை இழுத்து மூடினர். நெல்லை மாவட்டம் சிவசைலம் கல்யாணிபுரத்தில் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது கடையை மூடக்கோரி காவல்துறை அதிகாரிகளிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad