எம்.பி. திருச்சி சிவா மீது மகன், மருமகள் அடுக்கடுக்காகப் புகார்.
திருச்சி சிவாவின் மகனான மணிவண்ணன் என்கிற சூர்யா கடந்த 2013ஆம் ஆண்டு திருச்சியைச் சேர்ந்த பிரதியுஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் திருச்சி செய்தியாளர் மன்றத்தில் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து திருச்சி சிவா மீது பரபரப்பு புகார்களை கூறினர். சிவாவின் மகனான மணிவண்ணன், தமது மனைவி வேறு மதம் மற்றும் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் தந்தைக்கு தங்கள் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், பிரிந்து விடும்ப படி தொலைப்பேசி வாயிலாகவும், காவல் உயர் அதிகாரிகள் வாயிலாகவும் மிரட்டல் விடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
பின்னர் பேசிய மணிவண்ணன் மனைவி பிரதியுஷா, தாம் தற்போது நிறைமாத கர்ப்பமாக இருப்பதாகவும், ஆனால் காவல் துறை அதிகாரிகள் வீட்டிற்கு வந்து தரக்குறைவாகப் பேசுவதாக குற்றம்சாட்டினார்.
திருச்சியில் தனியாக ஒரு வீட்டில் வசித்து வரும் நிலையில், திருச்சி சிவா தங்களை மிரட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை