Header Ads

  • BREAKING



    ஆப்கானில் உள்ள தீவிரவாதிகள் மீது அமெரிக்க வெடிகுண்டு தாக்குதல்.


    ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது கடந்த வாரம் அமெரிக்கா வீசிய பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் இதுதொடர்பாக விரிவான விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் இந்தியாவின் தேசிய புலனாய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் கேரளாவில் இருந்து ஆண்கள், பெண்கள் உள்பட 21 பேர் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்காக சென்றனர்.அவர்களில் 13 பேர் தான் அமெரிக்க வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்திருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. கடந்த வாரம் ஐஎஸ் தீவிரவாத முகாம் மீது அமெரிக்கா நடத்திய பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad