Header Ads

  • சற்று முன்



    விஜயபாஸ்கர் கல்குவாரியில் இன்று மீண்டும் ரெய்டு.

    தமிழக சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரியில் இன்று மீண்டும் ரெய்டு தொடங்கியுள்ளது.

    ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக, வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாகப் புகார் எழுந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று சென்னையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய இடங்களில் உள்ள அவரது உறவினர்கள் வீடு, தொழில் நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி பணம் வழங்கியதற்கான ஆதாரம் சிக்கியது. அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயர் உள்பட அமைச்சர்கள், கட்சியில் உள்ள நிர்வாகிகளின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

    இதே போல சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள நடிகர் சரத்குமார் வீடு, சென்னை சாலிகிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி வீடு, சென்னை சிட்லபாக்கத்தில் உள்ள முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் வீடு என மொத்தம் 35 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

    இதையடுத்து வருமான வரி அலுவலகத்தில் நேரில் விளக்கமளிக்க அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரிடம் விசாரணை நடந்தது. அமைச்சர் விஜய பாஸ்கர், தன்னிடம் உள்ள ஆவணங்களைத் தாக்கல் செய்ய, கால அவகாசம் கேட்டார்.

    இந்நிலையில் அமைச்சர் விஜய பாஸ்கருக்கு சொந்தமான புதுகோட்டை திருவேங்கை வாசலில் உள்ள கல்குவாரியில் மத்திய பொதுப்பணித்துறையினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு தொடர்ந்து நடந்து வருகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad