Header Ads

  • BREAKING



    புதுவையில் பெட்ரோல்-டீசல் தினசரி விலை நிர்ணயம்: கைவிட இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்.


    புதுச்சேரி: பெட்ரோல்-டீசல் இவற்றின் விலையை தினசரி நிர்ணயிக்கும் முறையை புதுவையில் நடைமுறைப்படுத்தக்கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஆர்.விஸ்வநாதன் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:
    தினசரி பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயிக்கும் சோதனை முயற்சியை புதுவையிலும் நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தை சோதனை எலி போல் மத்திய பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது. புதுவையில் நிலவும் கடும் நிதி நெருக்கடி மக்களை வெகுவாக பாதித்துள்ளது. தினசரி எரிபொருள் விலையை நிர்ணயிப்பது அனைத்திலும் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தும்.
    புதுவை கிராமப்புற பெட்ரோல் நிலையங்கள் இன்னும் நவீன ப்படுத்தப்படவில்லை. தகவல் பரிமாற்ற குறைபாடுகளும் உள்ளன. இந்த சோதனை முறையில் புதுவையை இணைப்பது மக்கள் நலனுக்கு எதிராக அமையும். எனவே மத்திய அரசு இம்முறையை கைவிட வேண்டும் என்றார் விஸ்வநாதன்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad