Header Ads

  • BREAKING



    கஞ்சா பயன்படுத்துவதற்கான சட்டரீதியான தடையை நீக்குகிறது கனடா அரசு.


    18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மனமகிழ்ச்சிக்காக கஞ்சா பயன்படுத்துவதற்கான சட்டரீதியான தடையை கனடா அரசு நீக்க உள்ளது. இதற்கான மசோதா கனடா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. மசோதா நிறைவேற்றப்பட்டு, அடுத்த ஆண்டு ஜூலை முதல் நடைமுறைக்கு வர உள்ளது. கஞ்சாவின் சட்டவிரோத பயன்பாட்டை தடுக்க முடியாத நிலையில், அதனால் சிறார்களும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என கனடா அரசு தெரிவித்துள்ளது. இதைத் தடுப்பதற்கும், சட்டவிரோத விற்பனை மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்காகவும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மனமகிழ்ச்சிக்காக கஞ்சா புகைப்பதை அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக கனடா அரசு தெரிவித்துள்ளது. கனடாவில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க அரசு பில்லியன் கணக்கில் டாலர்களை செலவிடுகிறது. இதற்கென போலீஸ் படையிலும் பெரும் மனிதவளம் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையாளர்கள் ஆண்டுக்கு 8 பில்லியன் டாலர்கள் அளவிற்கு லாபமீட்டுவதாக கனடா அரசு தெரிவித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad