சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வெளியிட்டது வருமான வரித்துறை.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான சென்னை மற்றும் அவரது சொந்த ஊரான புதுக்கோட்டையில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 35 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் பல மணிநேரமாக சோதனை நடத்தினர். சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும், நான்கரை கோடி ரூபாய் பணம் ரொக்கமாக கைப்பற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதில் விஜயபாஸ்கர் உள்பட 7 அமைச்சர்களின் பெயர்களும், கட்சி நிர்வாகிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டிய மொத்த தொகையும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் 85 சதவீதம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க திட்டமிட்டிருந்ததாக ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் 2016ஆம் ஆண்டில் 5 கோடியே 16 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது போல ஒரு ஆவணமும் வெளியிடப்பட்டுள்ளது. அரசியல் நோக்கத்தோடு சோதனை நடைபெறுவதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது ஆவணங்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக வருமான வரித்துறை அறிக்கை அளித்த பின் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை