Header Ads

  • BREAKING



    அயர்ன் மேன்போல பறக்க உதவும் புதிய சாதனம்.

    ஆங்கில படங்களில் வரும் அயர்ன் மேன் பறப்பதை போலவே பறக்க உதவும் சாதனம் ஒன்றை இங்கிலாந்தைச் சேர்ந்தவர் கண்டு பிடித்துள்ளார். மார்வல் நிறுவனத்தின் பிரபல படமான அயர்ன் மேனில் இடம் பெறும் கதாபாத்திரமான அயர்ன் மேன் பறக்கும் விசேச உடை அணிந்து விண்ணில் பறந்து சாகங்களில் ஈடுபடும். இதனை கண்ட பிரவுனிங் என்பவர், இரும்பிலான பறக்கும் உடையை தயாரித்து உள்ளார். இதில் பறக்க உதவும், ஜெட் எந்திரத்தோடு, வைபை இணைப்பு, பறக்கும் வேகம், பறக்க வேண்டிய பாதை, செல்லும் இலக்கு ஆகியவற்றை கண் முன் காட்டும் மானிட்டர் என அதி நவீன கருவிகள் அனைத்தும் அதில் இணைக்கப்பட்டுள்ளன. நின்ற இடத்தில் இருந்து ஜெட் எந்திரத்தை இயக்கி விண்ணில் பறக்கவும், நினைத்த இடத்தில் இறங்கவும் முடியும் என்பதை நிரூபித்து உள்ளார் பிரவுனிங். இதன் மூலம் மனிதர்கள் வானில் தனியே பறக்க நினைக்கும் கனவு கைகூடும் என்கிறார் பிரவுனிங்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad