Header Ads

  • BREAKING



    வறட்சி நிவாரணம், விவசாயகடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறித்தி தமிழக விவசாயிகளின் டெல்லி போராட்ட புகைப்பட தொகுப்பு.

    வறட்சி நிவாரணம், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் தில்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் தங்கள் சிறுநீரை தாங்களே குடித்தது, போராட்டம் நடத்தியது அதிர்ச்சியை அளித்துள்ளது.  மக்களின் போராட்டங்களுக்கு செவி சாய்க்க வேண்டிய அரசோ இன்னும் மவுனம் காத்துவருகின்றது.




    விவசாயக் கடன்களை ரத்துசெய்யக் கோரி தில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதன் ஒரு பகுதியாக, டெல்லி  ஜந்தர் மந்தரில் சேலை உடுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள்.








    தமிழக விவசாயிகள் தேசிய வங்கிகளில் பெறப்பட்ட பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராடி வந்த நிலையில், தில்லி ராஜ்பாத் சாலையில் பழனிவேல், ராமலிங்கம், சரவணக்குமார் வாசுதேவன் ஆகியோர் திடீரென முழு நிர்வாணத்துடன் தரையிலும் கைகூப்பியபடி முன்னும் பின்னுமாக தரையில் உருளினர். இந்நிலையில் நிர்வாணப் போராட்டம் நடத்திய மூன்று விவசாயிகளை போலீஸார் சமாதானப்படுத்தி ஆடைகளை அணிய செய்த பிறகு கைது செய்தனர்.




    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad