Header Ads

  • சற்று முன்



    டெல்லியில் விவசாயிகளுடன் மண் சோறு சாப்பிட்டு ஆதரவு தெரிவித்த பிரேமலதா.

    டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை தமிழக முதல்வர் இதுவரை சந்திக்காதது ஏன் என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கேள்வியெழுப்பியுள்ளார். வறட்சி நிவாரண நிதி, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில், அய்யாகண்ணு தலைமையில் 29வது நாளாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாள்தோறும் நூதனமான முறைகளில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், செவ்வாய்கிழமை மண் சோறு சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கலந்து கொண்டு மண் சோறு சாப்பிட்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போல,விவசாயிகளின் போராட்டத்திற்கும் அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad