பயிர்க்கடன் தள்ளுபடி. தமிழக அரசின் நடவடிக்கைக்கு விவசாயிகள் வரவேற்பு.
பயிர்க்கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்ய முன்வந்துள்ளதற்கு, விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வரவேற்பு தெரிவித்துள்ளார்.தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த 41 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த அவர்களை பல்வேறு கட்சித் தலைவர்களும் நேரில் சந்தித்தனர். இந்நிலையில், போராட்டத்தை முடித்துக் கொண்ட விவசாயிகள் ரயில் மூலம் இன்று காலை சென்னை வந்து சேர்ந்தனர். ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய தமிழக அரசு முன்வந்திருப்பதற்கு வரவேற்பு தெரிவித்தார். விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
கருத்துகள் இல்லை