ஆதாரிலும் போலி: ஆட்களை அமுக்கியது போலீஸ்.
போலி ஆதார் அட்டைகளை தயாரித்து விற்பனை செய்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் அசாம் மற்றும் வங்காளதேச தொழிலாளர்கள் காபி தோட்டங்களில் தங்கி வேலை செய்து வருகின்றனர். திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களில் இவர்கள் அதிகமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து அசாம், வங்காளதேச தொழிலாளர்களின் அடையாள அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றை வாங்கி வைத்திருக்கும்படி போலீசார் அறிவுறுத்தினர். இதனால், அவர்களுக்கு போலியாக ஆதார் அட்டைகளை தயாரித்து ஒரு கும்பல் வழங்குவதாக ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் விராஜ்பேட்டை தாலுகா கோணிகொப்பா அருகே உள்ள தாரிகட்டே பகுதியில் ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது சிலர் போலி ஆதார் அட்டைகளை தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து லத்தீப், நவீன், பிரசன்னா, குருபிரசாத், முன்னா, அக்பர் அலி, அசன் அலி ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை