Header Ads

  • BREAKING



    பெட்ரோல்- டீசல் விலை குறைந்தது.

    பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 77 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 91 காசுகளும் குறைந்துள்ளது. நள்ளிரவு முதல் இந்த விலைக்குறைப்பு அமலுக்கு வந்துள்ளது.
    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கொண்டு 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் 15ஆம் தேதிக்குப் பிறகு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்யவில்லை. ஆனால், கடந்த மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி உயர்த்தப்பட்டதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இந்நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 77 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 91 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்த விலைக் குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை வரிகளுடன் சேர்த்து 69 ரூபாய் 28 காசுகளுக்கு விற்பனையாகிறது. டீசல் விலை லிட்டர் 58 ரூபாய் 82 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad