Header Ads

  • சற்று முன்



    இபே இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்தியது ஃபிளிப்கார்ட்.

    இந்தியாவின் மிகப் பெரிய இணையதள வணிக நிறுவனங்களில் ஒன்றான ஃபிளிப்கார்ட், இபே இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்தி இருக்கிறது. இந்த விவரத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் ஃபிளிப்கார்ட் அறிவித்துள்ளது. அமேசான் நிறுவனத்துடனான போட்டியை எதிர்கொள்ளும் விதத்தில், அமெரிக்காவை தலைமையிடமாக் கொண்டு செயல்படும் இபே நிறுவனத்தை ஃபிளிப்கார்ட் கையகப்படுத்த இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியாகி இருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எல்லை கடந்து வர்த்தக உறவை இணைந்து மேற்கொள்வது தொடர்பாகவும் இரு நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இபே, டென்சன்ட், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் 140 கோடி அமெரிக்க டாலரை முதலீடு செய்துள்ளன.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad