சட்டக் கல்லூரி மாணவரும் திமுக இளைஞரணி பிரமுரகருமான சந்திரசேகர் படுகொலை.
காஞ்சிபுரம் திமுக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் தாதா ஸ்ரீதர் தனபாலின் கூட்டாளி குறித்து கேலி செய்து பதிவிட்டதால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. காஞ்சிபுரம் வெள்ளைக்குளம் பகுதியை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவரும், திமுக இளைஞரணி பெறுப்பாளருமான சந்திரசேகர் என்பவர் தான் கொடூரமாக கொலை செய்யப்பட்டவர்..!
புதன்கிழமை மாலையில் வீட்டில் இருந்த அவரிடம் செல்போனில் பேசி வீட்டிற்கு வெளியே வரவழைத்த மர்ம கும்பல் ஒன்று அரிவாள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தலையில் கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டது. இதில் சம்பவம் இடத்திலேயே அவர் பரிதாபமாக பலியானார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சந்திர சேகரின் உடலை மீட்டு பிணகூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். இந்த கொலை சம்பவம் ஸ்ரீதர் தனபாலின் ஆதரவாளர்களால் நிகழ்த்தப்பட்டதாக சுட்டிக்காட்டுகிறது காவல்துறை..!
ஜல்லிக்கட்டு போராட்டம், விவசாயிகளுக்கான போராட்டம் என பொதுமக்கள் பிரச்சனைகளில் ஆர்வம் காட்டிவந்த சந்திரசேகர் காவல்துறையினரால் தேடப்படும் தாதா ஸ்ரீதர் தனபாலின் கார் ஓட்டுனரான தினேஷின் ஆதரவாளர்.
காஞ்சிபுரத்தில் இருந்து ஸ்ரீதர் தனபால் தலைமறைவான பின்னர் அவரது கார் ஓட்டுனர் தினேஷ் தலைமையில் ஒரு குழுவும், பாபு என்பவர் தலைமையில் ஒரு குழுவும் செயல்பட்டு வருவதாகவும் அவர்களுக்குள் யார் பெரியவர் என்ற பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகின்றது.
கடந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியான போது காஞ்சிபுரம் தாதா ஸ்ரீதர் தனபாலின் தம்பி வெங்கடேசனுக்கு எதிராக சந்திரசேகர் செயல்பட்டதாகவும், அதனால் ஸ்ரீதர் தனபாலின் கூட்டாளிகள் இவர் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் அண்மையில் சமூக வலைதளத்தில் தினேசுடன் தான் இருப்பது போன்ற புகை படத்திற்கு சோக முத்திரை பதிவிட்டு ஸ்ரீதர் தனபாலின் ஆதரவாளரான பாபு என்பவர் வெறுப்பேற்றியதாக கூறி கடுமையான வார்த்தைகளால் அவரை விமர்சித்து முக நூலில் பதிவிட்டுள்ளார் சந்திர சேகர்.
இதை கண்டு வெறுப்பான பாபு ,சந்திர சேகரை செல்போனில் அழைத்து கடுமையாக மிரட்டியுள்ளார். அவரது உரையாடலை முக நூலில் பதிவிட்டு பூனையாக இருக்கும் புதுப்புது ரவுடிகள் எல்லாம் தங்களை சிங்கம் என நினைத்து வலம்வருவதாக கிண்டலடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
ஸ்ரீதர் தனபால் ஆதரவாளர்களால் பகிரங்கமாக மிரட்டப்பட்ட நிலையில் சந்திரசேகர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ஸ்ரீதர் தனபாலுக்கும் தொடர்பு இருக்கின்றதா ? என்ற கோணத்தில் விசாரித்து வரும் காவல்துறையினர் கொலையாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
சமூக வலை தளமான முக நூல், முகம் தெரியாதவர்களுடனும் நட்பை வளர்த்துக்கொள்வதற்காக உருவாக்கப்பட்டது. அதைவிடுத்து விறுப்பு வெறுப்புகளை பதிவிட்டால் என்ன மாதிரியான விபரீதங்கள் நிகழும் என்பதற்க்கு இந்த கொலை சம்பவம் ஒரு உதாரணம்.

கருத்துகள் இல்லை