அமைச்சர் ஜெயக்குமாருடன் விவசாயிகள் வாக்குவாதம்.
டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை சந்திக்க சென்ற அமைச்சர் ஜெயக்குமாருடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில் 18வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளை அமைச்சர் டி.ஜெயக்குமார் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில் சிலர், அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரண்டு வாரங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அமைச்சர் மிகுந்த கால தாமதமாக வந்திருப்பதாக அவர்கள் குறை கூறினர். தங்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட யாரையும் கைது செய்யக் கூடாது என அமைச்சரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.
கருத்துகள் இல்லை