இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலாகிறது.
வங்கக்கடலில் இன்று நள்ளிரவு முதல் மீன்பிடித்தடைக்காலம் அமலுக்கு வருவதையொட்டி விசைப்படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கோடைக்காலத்தில்தான் பொதுவாக ஆழ்கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. இதனால் கடலில் மீன்கள் பிடிப்பதை தடைசெய்யும் விதமாக கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று நள்ளிரவு மீன்பிடித்தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இதனால் நாகை மாவட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் தங்கள் விசைப்படகுகளை கரையில் நிறுத்தி உள்ளனர். மேலும் மீனவர்கள் தங்களின் விசை படகுகளையும், மீன்பிடி உபகரணங்களை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வரும் காலங்களில் மீன் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கருத்துகள் இல்லை