Header Ads

  • BREAKING



    சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்றார்.

    சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்றார்.
    சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த எஸ். கே.கவுல் உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றதையடுத்து ஹுலுவாடி ஜி ரமேஷ் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி கடந்த 31-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
    1985-ஆம் ஆண்டு வழக்கறிஞர் பணியைத் தொடங்கிய இந்திரா பானர்ஜி கடந்த 2002-ஆம் ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட இவர் தற்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளார். இந்திரா பானர்ஜி 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் வரை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பணியாற்றுவார். இந்திரா பானர்ஜி தலைமை நீதிபதியாக பொறுபேற்றதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 22 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad