Header Ads

  • BREAKING



    ஜெர்மன் நாட்டு பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம்.

    மாமல்லபுரம் அருகே ஜெர்மன் நாட்டு பெண் கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக சென்னையில் உள்ள ஜெர்மன் தூதரகத்தில் புகார் தரப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சிலர் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தனர். இவர்கள்  மாமல்லபுரம் பகுதியில் தனியார் நட்சத்திர விடுதி ஒன்றி தங்கி சுற்றுலா மேற்கொண்டிருந்தனர். மற்றவர்கள் சுற்றிப்பார்க்க சென்றிருந்த நிலையில் 38 வயது பெண் ஒருவர் மட்டும் மாமல்லபுரத்தை அடுத்த பட்டிப்புலம் என்ற இடத்தில் கடற்கரையோரமாக சூரியக் குளியலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த 3 பேர் கத்தியைக் காட்டி மிரட்டி அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
    இது தொடர்பாக மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அந்தப் பெண் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார் மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். இது தொடர்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஜெர்மன் தூதரகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad