Header Ads

  • BREAKING



    அரசு வழக்குரைஞர்களுக்கான கட்டணம் மூன்று மடங்கு அதிகரிப்பு.


    நீதிமன்றங்களில் வாதாடுவதற்காக அரசு வழக்குரைஞர்களுக்கு வழங்கப்படும் மாத கட்டணம் மூன்று மடங்கு அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
    சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், அரசு சார்பில் ஆஜராகி வாதாடுவதற்கு அரசு தலைமை வழக்குரைஞர், கூடுதல் தலைமை அரசு வழக்குரைஞர், அரசு வழக்குரைஞர் (Govt Pleader),  அரசு சிறப்பு வழக்குரைஞர், உள்ளிட்டோருக்கு மாத கட்டணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் கட்டணங்களை மூன்று மடங்கு அளவுக்கு தமிழக அரசு உயர்த்தியுள்ளதாக உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது, அரசு தலைமை வழக்குரைஞருக்கு(Advocate General) மாதம் ஒன்றுக்கு ரூ.75 ஆயிரம், கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞருக்கு (Additional Advocate General) ரூ.65 ஆயிரம், அரசு வழக்குரைஞருக்கு (Govt Pleader) ரூ.50 ஆயிரம், அரசு சிறப்பு வழக்குரைஞருக்கு(Special Govt Pleader) ரூ.30 ஆயிரம், கூடுதல் அரசு வழக்குரைஞருக்கு (Additional Govt Pleader) ரூ.25 ஆயிரம், அரசு வழக்குரைஞருக்கு (Civil) ரூ.20 ஆயிரம் என, வாதாடுவதற்கான கட்டணத்தை உயர்த்தி வழங்கியுள்ளது.
    மேலும் அரசு குற்றவியல் வழக்குரைஞருக்கு (Public Prosecutor-criminal) ரூ.50 ஆயிரம், கூடுதல் அரசு குற்றவியல் வழக்குரைஞருக்கு (Additional Public Prosecutor-criminal) ரூ.30 ஆயிரம், அரசு வழக்குரைஞருக்கு (Govt Advocate-criminal) ரூ.25 ஆயிரம் என, முந்தைய கட்டணத்தை விட மூன்று மடங்கு அளவுக்கு வாதாடுவதற்கான மாத கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
    இதுதவிர, அரசு வழக்குரைஞர்களில் வாகன வசதி இல்லாதவர்களுக்கு சிறப்பு படியாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad