Header Ads

  • BREAKING



    இந்தியப் பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு.


    தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி, முதன்முறையாக 9 ஆயிரத்து 300 புள்ளிகளை தாண்டியிருக்கிறது. ஆசியா மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தையில் ஏற்பட்ட உயர்வின் தாக்கம் இன்று இந்தியப் பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 287 புள்ளிகள் அதிகரித்து, 29 ஆயிரத்து 943 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 88 புள்ளிகள் உயர்ந்து 9 ஆயிரத்து 306 புள்ளிகளில் நிலைகொண்டது. ரிலையன்ஸ் நிறுவனம் 4வது காலாண்டில் நிகர லாபமாக 8 ஆயிரத்து 46 கோடி ரூபாய் ஈட்டியிருப்பதாக அறிக்கை வெளியானதை அடுத்து அந்த நிறுவனத்தின் பங்கு 1.21 சதவீதம் அதிகரித்தது. எம்&எம், பார்தி ஏர்டெல், ஹீரோ மோட்டோ கார்ப், ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி நிறுவனப் பங்குகளும் விலை உயர்ந்தன.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad