Header Ads

  • BREAKING



    கூட்டுறவு வங்கியில் விவசாய கடன் தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு.

    கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரி, தென்னிந்திய நதிகள் இணைப்பு பாதுகாப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் உள்ள கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    5 ஏக்கர் வரை நிலம் வைத்திருப்போரின் கடனை தள்ளுபடி செய்ய, 2016 இல் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கில் விவசாயிகள் வங்கியில் பெற்ற நகை, பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அமர்வு உத்தரவிட்டது.

    இந்த உத்தரவு பற்றி அய்யாக்கண்ணுவிடம் கேட்டபோது, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கடன்களை தள்ளுபடி செய்யும் வரை தங்கள் போராட்டம் தொடரும்’என்று தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad