Header Ads

  • BREAKING



    ஓபிஎஸ் அணியின் கோரிக்கை ஏற்பு: சசிகலா பேனர்கள் அகற்றம்.


    அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சசிகலாவின் படங்கள் இடம்பெற்றிருந்த பேனர் அகற்றப்பட்டுள்ளன.
    அதிமுகவில் பிளவுபட்டுள்ள ஓபிஎஸ் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் மீண்டும் இணைவதற்கான பேச்சுவார்த்தை இரு அணிகளுக்கும் இடையேயான கருத்து வேறுபாட்டால் இழுபறி நீடித்து வருகிறது.
    இந்நிலையில் ஓ.பிஎஸ் அணி சார்பில் மதுசூதனன், சசிகலாவின் புகைப்படங்களை அதிமுக அலுவலகமான தலைமைக் கழகத்திலிருந்து உடனே அகற்றி அதன் புனிதத்தை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், சசிகலா பேனர்களை அகற்ற வேண்டும் என்ற மதுசூதனன் கோரிக்கையை ஏற்க முடியாது என இபிஎஸ் அணியைச் சேர்ந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
    இந்நிலையில், இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து சசிகலாவின் பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை இரு அணிகளுக்கிடையேயான சமரச முயற்சிக்கு முதல்படியாக அமையலாம் எனக் கருதப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad