Header Ads

  • சற்று முன்



    இந்தியாவின் இரவுத் தோற்றம்! நாசா புகைப்படங்கள் வெளியீடு.

    இந்தியாவின் இரவு நேரத் தோற்றத்தை விண்வெளியில் இருந்து புகைப்படங்களாக எடுத்து அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான (நாசா) வெளியிட்டுள்ளது.
    குறிப்பிட்ட கால இடைவேளையில் விண்வெளியில் இருந்து உலகின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரத் தோற்றத்தை தனது செயற்கைக்கோள்கள் மூலம் படமெடுத்து வெளியிடுவதை நாசா வழக்கமாகக் கொண்டுள்ளது. அதன்படி, கடந்த 2016-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட உலகின் பல்வேறு பகுதிகளின் புகைப்படங்களை நாசா வியாழக்கிழமை வெளியிட்டது.
    அதில், இந்தியா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியின் தற்போதைய இரவு நேரத் தோற்றமும் இடம் பெற்றுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2012-ஆம் ஆண்டு இதுபோன்ற படத்தை நாசா வெளியிட்டுள்ளது. அதற்கும், இப்போதுள்ள இந்தியாவின் இரவு நேரத் தோற்றத்துக்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது.
    இந்தியாவில் பெரிய நகரங்கள், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்பட பல்வேறு இடங்களில் குடியேற்றம் விரிவடைந்துள்ளதால், இரவு நேரத்தில் அப்பகுதிகள் மின்சார விளக்குகளின் வெளிச்சத்தால் ஒளிர்வது அதிகரித்துள்ளது.
    இந்தியாவின் பல பகுதிகள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது ஒளி வெள்ளத்தில் மிதக்கின்றன.
    இரவு நேரத்தில் இந்தியாவின் ஒளி அதிகரித்து வருவது நாட்டில் புதிய குடியேற்றங்கள் அதிகரித்து வருவதையும், பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருவதையும் காட்டுகிறது.
    முக்கியமாக, தில்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட நகர்ப்புறங்களிலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் வெளிச்சம் அதிகமாகியுள்ளது. முக்கிய நகரங்களில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதிய குடியேற்றங்கள் உருவாகி வருவதையும், அப்பகுதியில் மக்கள் அதிகம் வசித்து வருவதையுமே இது காட்டுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad