தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
தமிழகத்தின் கடலோர பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்றும், வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழகம் முழுவதும் வானிலை வறண்டு காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த வரும் இரு நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்றும், இதனால் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும், இரு தினங்களுக்கு பின்னர் வெப்பத்தின் அளவு குறையக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை