Header Ads

  • சற்று முன்



    ஜம்மு – காஷ்மீரில் ஆசியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதை.

    ஜம்மு – காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவிலேயே மிக நீளமான சுரங்கப் பாதையை, வரும் ஞாயிறன்று பிரதமர் நரேந்திரமோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். ஸ்ரீநகர் – ஜம்மு இடையே 3, 720 கோடி ரூபாய் செலவில் புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில், உத்தம்பூர் மாவட்டம் செனானியிலிருந்து – ரம்பன் மாவட்டம் நஷ்ரி வரை இமயமலையைக் குடைந்து சுரங்கப்பாதையாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள், செல்போன் டவர் என அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை, ஆசியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதையாகும். 9.2 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதையால், 2 மணி நேர பயணம் குறையும். இதை பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஞாயிற்றுக்கிழமையன்று திறந்து வைக்கிறார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad