Header Ads

  • BREAKING



    சிரியா மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் கச்சா எண்ணெய் விலை உயருகிறது.

    சிரியா விமான தளத்தின் மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விற்பனைக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிரியாவின் எல்லையில் உள்ள ஈராக் எண்ணெய் உறபத்தி செய்யும் மிகப்பெரிய நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடம் வகிக்கிறது. அதே போன்று எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பில் சவூதி அரேபியா, ஈரான் போன்ற நாடுகள் பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளன.சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தால் அமெரிக்காவும் ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதும் சூழல் ஏற்பட்டுள்ளது. இத்தகைய நிலையில் கச்சா எண்ணெயின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அமெரிக்காவின் தாக்குதலையடுத்து கச்சா எண்ணெயின் விலை நேற்று இரண்டு சதவீதம் கூடியது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad