Header Ads

  • சற்று முன்



    ஜியோவின் புது ஆஃபர் 'தன் தனா தன்'

    ரிலையன்ஸ் ஜியோ, ‘தன் தனா தன்’ எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

    சமீபத்தில் தனது சம்மர் ஆஃபரை ரத்து செய்தாலும், தன்னுடைய அடுத்த அதிரடியாக, ‘தன் தனா தன்’ என்ற புதிய ஆஃபர் திட்டத்தை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது ஜியோ. இந்தப்புது திட்டம், ரூ.309 மற்றும் ரூ.509-க்கு வழங்கப்படுகிறது.

    புதிதாக சேரும் வாடிக்கையாளர்களுக்கு, ரூ.408 மற்றும் ரூ.608-க்கு ஜியோவின் அத்தனை சேவைகளும் வழங்கப்பட உள்ளது. ஜியோ ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு, ரூ.309-ல் நாள் ஒன்றுக்கு 1ஜிபி வீதம் மூன்று மாதங்களுக்கும், ரூ.509-ல் ஒரு நாளைக்கு 2ஜிபி வீதமும் வழங்கப்படும். மேலும், மூன்று மாதங்களுக்கு ஜியோவின் இலவச போன் கால்கள், மெசேஜ்கள், ஜியோ ஆப்ஸ் என அத்தனை சேவைகளும் இந்தத் திட்டத்திலும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏப்ரல் 15-ம் தேதிக்குள், வாடிக்கையாளர்கள் இதில் இணையலாம் என கால அவகாசம் தரப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad