Header Ads

  • BREAKING



    டெல்லியில் மாடுகள் போல் சித்தரித்து வைக்கோல் உண்ணும் போராட்டத்தில் விவசாயிகள்.


    டெல்லியில் 35-வது நாளாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள், இன்று மாடுகள் போல் தங்களை சித்தரித்து வைக்கோல் உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய வங்கிகளில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தல், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், நதிநீர் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எலிக்கறி உண்ணுதல், நிர்வாண போராட்டம், புடவை அணியும் போராட்டம், என பல்வேறு நூதன முறைகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசு தங்களை கால்நடைகள் போல் கருதி கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை எனக்கூறி, வைக்கோல் உண்ணும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad