Header Ads

  • BREAKING



    டி.டி.வி. தினகரனிடம் விசாரணை நடத்த தில்லி குற்றப்பிரிவு போலீசார் சென்னை வருகை.

    சென்னை: டி.டி.வி. தினகரனிடம் விசாரணை நடத்த தில்லி குற்றப்பிரிவு போலீசார் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

    இரட்டை இலை சின்னத்தைப் பெற டிடிவி.தினகரன் பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவருக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தது கடந்த 17ஆம் தேதி தெரியவந்தது.

    தெற்கு தில்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திராவிடம் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து டிடிவி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பினர்.

    இந்நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்த டெல்லி குற்றப்பிரிவு உதவி கமிஷ்னர் சஞ்சய் ஷெராவத், ஆய்வாளர் நரேந்திரஷா தலைமையிலான டெல்லி காவல்துறையினர் சென்னை வந்துள்ளனர். லஞ்சம் பெற்றதாக சுகேஷ் தந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தினகரனிடம் சம்மன் அளிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad