நாளை முதல் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்க உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 64 துறைகளை சேர்ந்த நான்கரை லட்சம் அரசு ஊழியர்கள் இப்போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் அன்பரசன் தெரிவித்தார். இதில் தலைமைச் செயலக ஊழியர்களும் பங்கேற்க உள்ளனர். மத்திய அரசுக்கு இணையான ஊதியம், பழைய ஓய்வூதியம், 20% இடைக்கால நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் வேலை நிறுத்தத்தை அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை