விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.
டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன், பெண் வழக்கறிஞர் சங்கத் தலைவர் நளினி உள்ளிட்ட ஏராளமானோர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் விவசாயிகளுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பருவமழை பொய்த்துப்போனதால் விவசாயிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த வழக்கறிஞர்கள் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தினர். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், வறட்சி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை காக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் வலியுறுத்தினர்.

கருத்துகள் இல்லை