Header Ads

  • சற்று முன்



    தமிழக அமைச்சர்கள் அனைவரும் தொடர்ந்து தன்னுடனேயே இருக்கின்றனர் – டி.டி.வி தினகரன்.


    தமிழக அமைச்சர்கள் அனைவரும் தொடர்ந்து தன்னுடனேயே இருக்கின்றனர் என அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
    தமிழக அமைச்சர்களில் பத்து பேர் தினகரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளதாக இரண்டு நாட்களாக அவ்வப்போது தகவல் வெளியாகி வந்தது. இதே போன்று வருமான வரித்துறை சோதனைக்கு ஆளான சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் அப்பதவியில் இருந்து நீக்கப்பட இருப்பதாக செய்திகள் வலம் வந்தன. இந்த நிலையில் சென்னை அடையாறில் உள்ள டி.டி.வி தினகரன் வீட்டில் அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க அம்மா அணியின் நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் தனக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கவே வந்திருப்பதாக கூறினார். 20 பேர் கூடி பேசிக் கொண்டிருந்த போது சில விவகாரங்கள் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது உண்மை தான் என்றும் அவர் தெரிவித்தார்.
    தமிழக அமைச்சர்கள் 10 பேர் போர்க்கொடி உயர்த்தியுள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து தினகரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், அமைச்சர்கள் அனைவரும் தன்னுடன் தான் இருப்பதாகவும், வதந்திகள் பரவுவதாகவும் கூறினார்.
    சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி நீக்கம் செய்யப்பட உள்ளதாக வெளியான தகவல் தவறு என்றும் தினகரன் தெரிவித்தார். வருமான வரித்துறை சோதனைக்கு ஆளானதற்காக அமைச்சர் பதவியில் இருந்து விஜயபாஸ்கரை நீக்குவது நியாயம் அல்ல என்றும் அவர் கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad