Header Ads

  • BREAKING



    சர்வசாதாரணமாக குஜராத் சாலையில் உலாவிய சிங்கங்கள்.


    குஜராத் மாநில நெடுஞ்சாலையில் கூட்டமாக உலவித் திரிந்த சிங்கங்களால் வாகன ஓட்டிகள் பதற்றம் அடைந்தனர். பிபாவாவ் – ராஜூலா (pipavav – rajula)நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்த போது, தீடீரென சுமார் 15 சிங்கங்கள் தங்களது குட்டிகளுடன் சாலையைக் கடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர்கள் சிங்கங்கள் சாலையைக் கடக்கும் வரை காத்திருந்தனர்.
    கிர் தேசியப் பூங்காவை சுற்றியுள்ள சாலை என்பதால் தண்ணீர் தேடி சிங்கங்கள் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் சர்வசாதாரணமாக சாலையில் கூட்டமாக சுற்றித்திரிந்த சிங்கங்களால் வாகன ஓட்டிகள் பீதியில் உறைந்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad