ஒகேனக்கல்லில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் மெயின் அருவி.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வறட்சி ஏற்பட்டுள்ளதால், மெயின் அருவி தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. கர்நாடக அரசு தண்ணீரை திறந்து விடாததாலும், வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு பருவமழைகள் பொய்த்ததாலும், ஒகேனக்கல் மெயின் அருவியில் பாறைகளுக்கிடையே தண்ணீர் குட்டை போல் தேங்கியிருக்கிறது. இதனால், ஒகேனக்கலுக்கு வழக்கமாக வரும் சுற்றுலா பயணிகளின் வரத்து இல்லாததால், உள்ளூர் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். எப்போதும் தண்ணீர் வந்துகொண்டிருக்கும் மெயின் அருவி வறண்டு போனதால், சுற்றுலா பயணிகள் குளிக்க இடம் இல்லாமல் தவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை