புதுச்சேரி அமைச்சரின் உதவியாளர் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை.
புதுச்சேரி அமைச்சர் கந்தசாமியின் உதவியாளர் வீரப்பன், மர்ம கும்பலால் ஓடஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடலூர் ரெட்டிச்சாவடி பெரிய காட்டுப்பாளையம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற அவரை, 5 பேர் கொண்ட மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களால் ஓட ஓட விரட்டி வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. படுகாயம் அடைந்த வீரப்பனை ரெட்டிச்சாவடி போலீசார் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வீரப்பன் உயிரிழந்தார். வீரப்பனை படுகொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை