Header Ads

  • சற்று முன்



    அண்ணா சாலையில் திடீர் பள்ளம்: பள்ளத்தில் சிக்கிய பேருந்தும் காரும் மீட்பு.

    சென்னை அண்ணா சாலையில் ஜெமினி மேம்பாலம் அருகே திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் கடும் போக்குரவத்து நெரிசல் ஏற்பட்டது.2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பள்ளத்தில் சிக்கிய பேருந்தும் காரும் அப்புறப்படுத்தப்பட்டன.

    சென்னையின் மையப்பகுதியான அண்ணாசாலையில் மெட்ரோ ரயில் சேவைக்காக பூமிக்கடியில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பிற்பகல் சுமார் 2 மணியளவில் ஜெமினி மேம்பாலம் அருகில் சர்ச் பார்க் பள்ளியின் எதிரில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதில் மாநகரப் பேருந்தும் காரும் சிக்கிக்கொண்டன. பேருந்தில் இருந்த 35 பயணிகளும் காயமின்றி உயிர்தப்பினர். காரில் பயணித்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தகவல் அறிந்து 2 ராட்சத கிரேன்களுடன் சம்பவயிடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் முதலில் காரை பள்ளத்தில் இருந்து மீட்டனர். பின்னர் பேருந்துந்தை கிரேன் மூலம் பள்ளத்தில் இருந்து வெளியே எடுத்தனர்.

    மீட்பு பணிகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார் நாளை காலைக்குள் போக்குவரத்து வழக்கத்திற்கு திரும்பும் என தெரிவித்தார். சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் காரணமாக பாரிமுனையில் இருந்து அண்ணாசாலை வழியாக செல்லும் பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad