Header Ads

  • BREAKING



    கொலை செய்து விட்டு ஃபேஸ்புக்கில் நேரலை செய்த நபருக்கு போலீஸ் வலைவீச்சு.


    அமெரிக்காவின் ஓஹியோ (ohio)மாநிலத்தில் முதியவர் ஒருவரை சுட்டுக் கொலை செய்ததை பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். கிளீவ்லாந்தைச் (cleveland) சேர்ந்த ஸ்டீவ் ஸ்டீபன்ஸ் என்பவர், சாலையில் நடந்து சென்ற 72 வயது முதியவரான ராபர்ட் காட்வின் (robert godwin) என்பவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார். முதியவரை கொலை செய்ததை தமது பேஸ்புக் பக்கத்தின் மூலம் நேரலையில் ஒளிபரப்பியுள்ளார்.
    காதலி தன்னை விட்டு பிரிந்து சென்ற விரக்தியில் இருந்த ஸ்டீவ் ஸ்டீபன், இதற்கு காரணமானவர்களை பழி வாங்க நினைத்து இவ்வாறு செய்வதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக மேலும் 15 பேரை கொலை செய்த வீடியோவையும் ஸ்டீஸ் ஸ்டீபன்ஸ் வெளியிட்டுள்ளதால், அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad