Header Ads

  • BREAKING



    கோகுலம் நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை




    சென்னையில் கோகுலம் நிதி நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளரின் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
    சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு தென்னிந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோகுலம் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் ஏராளமானோர் வாடிக்கையாளர்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலைமுதல், அந்நிறுவனத்தின் 78 அலுவலகங்களில் 500க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மத்தியப் படை பாதுகாப்புடன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கோடம்பாக்கத்தில் உள்ள கோகுலம் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், டிரஸ்ட்புரத்தில் உள்ள கோகுலம் நிறுவன உரிமையாளர் கோபாலன் வீடு, அசோக் நகரில் உள்ள கோகுலம் பார்க் விடுதி உள்பட சென்னையில் 36 இடங்கள், கேரளாவில் 29 இடங்கள், பெங்களூரில் 5 இடங்கள், கோவையில் 5 இடங்கள், புதுச்சேரியில் 2 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த சில வருடங்களாக கோகுலம் நிதி நிறுவனம் முறையாக வரி செலுத்தவில்லை என்ற புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும், இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad