ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு.
பணப்பட்டுவாடா புகார்களை தொடர்ந்து, ஆர்கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரது வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறையின் சோதனையில், ஏராளமான ஆவணங்கள் பிடிபட்டதாக தகவல்கள் வெளியாகின.
தற்போது வெளியாகியுள்ள அந்த ஆவணங்களில் பணப்பட்டுவாடா குறித்த பல்வேறு தகவல்கள் குறிப்பாக, ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்களும் கிடைத்தாக தெரிந்தை அடுத்து, நேற்று நடைபெற்ற கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, துணை தேர்தல் ஆணையர்கள், தமிழக தேர்தல் அதிகாரி லக்கானி, சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா உட்பட அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை