ரூ. 15.75 கோடி பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பறிமுதல்.
டெல்லியில் சுமார் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வருவாய் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். ஜன்தேவாலன் (Jhandewalan) மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள குடியிருப்பின் அருகே அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், 15 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பிடிபட்டன. இந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருந்ததாக நகை வியாபாரி, ரியல் எஸ்டேட் அதிபர் உள்ளிட்ட 10 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவற்றை வைத்திருப்பதற்கான முறையான கணக்குகள் உள்ளதா என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால் 5 மடங்கு அபராதம் என்ற புதிய சட்டத்தின்படி, இவர்கள் மீது, 78 கோடியே 75 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை